புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நம்மால் முடியும்” நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான நீர் நிலைகளை மக்கள் பங்களிப்போடு மீட்டெடுத்து வரும் செயல்பாடுகளை நிகழ்ச்சியாக தயாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஏரி ,குளம், கண்மாய், குட்டை ,பாசன வாய்க்கால், நீர் வரத்து கால்வாய் என பல்வேறு நீர் ஆதாரப்பணிகளோடு குறுங்காடுகள் வளர்ப்பு வனப்பகுதியை பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்புகின்றனர்.
அந்த வகையில் விருதுநகரில் பழமை வாய்ந்த எறைய நாயக்கனூர் ஊரணியை சீரமைக்கும் பணியை நம்மால் முடியும் குழுவினர் செய்தனர். இந்த நிகழ்ச்சியை சித்ரவேல் இயக்க , பூங்குழலி தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கும் அதன் மறு ஒளிபரப்பு ஞாயிறு காலை 11:30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.