neppolian-271115தமிழக பாரதிய ஜனதாவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பில் கோலிவுட்டின் பிரபலங்கள் பலர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவராக பிரபல நடிகர் நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குனரும், பாடகருமான கங்கை அமரன், பாஜகவின் கலைப்பிரிவின் புரவலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், கலைப்பிரிவின் மாநில துணைத்தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகை குட்டிபத்மினி பிரசார பிரிவின் மாநில துணைத்தலைவராகவும், பிரபல நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் கலைப்பிரிவின் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
English summary-Neppolian,Gangai amaran new members of BJP