whatsapp-heroதொழில்நுட்பம் நவீனமயமாகிவிட்ட இந்த காலத்தில் செய்திகளை விரைவில் தெரிந்து கொள்ள, பரிமாறிக்கொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்றவைகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிபுரிந்து வருகின்றது. ஆண்ட்ராய்ட் போன் மூலம் செலவில்லாமல் உலகில் நடைபெறும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் நிலையில் இந்த சமூகவலைத்தளங்களை தமிழக அரசு செய்திகளை அறிய பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நலதிட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை ‘வாட்ஸ்அப்’ மூலம் பொதுமக்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் செய்திகளை மேற்குறிப்பிட்ட ஏராளமான அமைப்புகள் ‘வாட்ஸ்அப்’ வாயிலாக உடனுக்குடன் செய்திகளை அறிந்து அவைகளை அவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள மற்றவர்களுக்கு பரிமாறிக் கொள்ளும் போது, செய்திகள் எண்ணற்ற பொதுமக்களை விரைவாகவும், மிக எளிதாகவும் சென்றடைகிறது. அதன் வாயிலாக பொதுமக்கள் அரசின் செய்திகளை அறிந்து பயன்பெற நல்லதொரு வாய்ப்பு ஏற்படுகிறது.

மேலும், ‘வாட்ஸ்அப்’ மூலம் அரசின் செய்திகளை ஒருவர் பெறும்போது தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களை விட மிக விரைவாக அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்கள் வசம் உள்ள கைபேசி வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இதன் வாயிலாக செய்திகளை ஊடக நிறுவனங்களும் மற்றும் அதன் தொடர்புடைய ஊடகப் பிரதிநிதிகளும் அவரவர் பணி நிமித்தமாக எந்த இடத்தில் இருந்தாலும், அங்கேயே அப்போதே செய்திகளை ‘வாட்ஸ்அப்’ மூலமாக மிகவிரைவில் அறிந்து கொள்ள இயலும்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் செய்திதுறை விறுவிறுப்பாக செய்து வருவதாகவும் விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

English Summary:News of Tamilnadu Government by Whatsapp. Beginning Soon.