கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய கடற்படை பிளஸ் டூ முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம்- ஜூலை 2019’ என்ற பயிற்சித் திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும். பின்னர் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள். இது நிரந்தர பணிவாய்ப்பாகும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
(அத்துடன் இவர்கள் எஸ்எஸ்பி நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.)
சம்பளம்: ரூ.83,448/- முதல் ரூ.96,204/ வரை
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி (SSB)நடத்தும் இரு நிலைகளில் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018
மேலும் விவரங்களுக்கு: https://www.joinindiannavy.gov.in