திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. அதன் 3-ஆம் நாளான திங்கள்கிழமை மாலையில் திருக்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 5 முறை வலம் வந்தார்.
அப்போது, திருக்குளப் படிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். தெப்பத்தில் நாகசுரம் இசைக்கப்பட்டு, வேதபாராயணம் செய்யப்பட்டது. பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. தெப்போற்சவத்தை முன்னிட்டு வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன.