வளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் பொதுமக்களுக்கு தேவையான பல வசதிகள் ஆன்லைனிலேயே கிடைத்து வரும் நிலையில் ஆவின் நிறுவனமும் இந்த ஆன்லைன் வசதியின் மூலம் தங்கள் சேவையை பொதுமக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. இதன்படி புதிதாக மாதாந்திர ஆவின் பால் அட்டை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாதாந்திர பால் அட்டை நுகர்வோருக்கு ஆவின் வட்டார அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தங்கு தடையின்றி பால் வழங்கப்படுகிறது. மேலும், நுகர்வோர் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆவின் புதிய மாதாந்திர பால் அட்டை வாங்குவதற்கும், புதுப்பித்துக்கொள்ளவும் இணையதளத்தில் (www.aavinmilk.com) வசதி செய்யப்பட்டுள்ளது. பால் அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை நகலைச் சமர்ப்பித்து பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், நுகர்வோர் தங்கள் வீட்டு திருமணம், வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், சமையல் கலைஞர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தங்கள் பால் மற்றும் பால் பொருட்கள் மொத்த தேவைக்கும் ஆவின் அலுவலகத்தை நேரில் அல்லது இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தொலைபேசி எண் 94455-30503 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். நுகர்வோர் தங்கள் கருத்துகளை நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவை 1800-425-3300 (இலவச தொலைபேசி) என்ற தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
English Summary : Consumer can now submit his id proof and apply for new Aavin milk card through online.