சருமப் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆரஞ்சுத் தோல் டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சுத் தோல் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
* ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.
* 2 டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
* பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.