மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று (28.03.2023) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி பெருவிழா இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.