passport-25102015-1வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பல மாதங்கள், பல வாரங்கள் மற்றும் பல நாட்கள் காத்திருந்த காலங்கள் முடிந்து தற்போது  விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி மற்றும் அவர்களுடைய பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட நாட்களாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து புகார் கூறப்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்கள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு இது 42 நாட்களாகவும்,  2015ஆம் ஆண்டில் இது 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் அதற்குள் போலீஸ் விசாரணை முடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நடைமுறை குறித்து பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி வட்டாரங்கள் கூறும்போது,  இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

English Summary: Passport in a week. Eases rules for the Foreign Ministry.