ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் குறைகள் இருந்தால், சுருக்கமாக கோரிக்கை விவரங்களை 2 பிரதிகளில் பெயர், தொலைபேசி எண், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய புத்தக எண், நிலுவையில் உள்ள அலுவலகம்(முழு முகவரியுடன்) “ஆட்சியர் அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62 இராஜாஜி சாலை, சென்னை-1′ என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
English Summary: Pensioners grievance meeting on 26th February.