இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இருந்த இடத்தில் கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் அதனால் குற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் பலரும் தனிநபரின் வங்கி சார்ந்த தரவுகளை திருடி அதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களின் பணத்தை கையாள செய்து விடுகிறார்கள்.
இது தொடர்பான புகார்கள் அண்மை காலமாக அதிகரித்து வருவதால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் youtube வீடியோ மூலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக தெரிவித்துள்ளார். Youtube வீடியோக்களுக்கு லைக் செய்ய வைத்து அதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை கூறி மக்களை பணத்தை கட்ட தூண்டுவது. இந்த இணையதளம் மூலமாக கட்டிய பணம் பயனர்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. அதனால் பொதுமக்கள் எந்த வித இணையதளத்திலும் பணத்தைக் கட்டி ஏமாற வேண்டாம் எனவும் பான் மற்றும் ஆதார் கார்டு குறித்த விவரங்களை பதிவிட வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.