மெட்ராஸ்’ வெற்றி படத்தை அடுத்து கார்த்தி நடித்திருக்கும் ‘கொம்பன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் விறுவிறுப்பாக புக் ஆகி வரும் நிலையில் இந்த படத்தை தடை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களூக்கு முன்னர் நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் தலைப்பே சண்டையை தூண்டுவதாக அமைந்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் படத்தை தடை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொம்பன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தைய இயக்கியுள்ளார்.
English Summary : As “Komban” enters the final stage of releasing, it also announced to be released on April 2nd. Now the petition has been passed to Chief Minister to ban the film.