மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் ரயில்வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.
கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தை, திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தை சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
திருமங்கலம் முதல் ஆவடி வரை சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய எல் அண்ட் டி ஐடெல் நிறுவனத்துக்கும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை வழித்தடத்தில் ஆய்வு செய்வதற்கு ஆர்.வீ அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கும், சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை வழித்தடத்தில் ஆய்வு செய்ய சிஸ்ட்ரா நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.