“பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்”
ஜெயா டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக சொல்லின் செல்வர் திரு.பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகவுள்ளது. அறிவியல் முன்னேற்றம் சமூகத்தைச் சிதைக்கிறதா, செதுக்குகிறதா என்ற தலைப்பில் நடக்கும் இப்பட்டிமன்றத்தில் சிதைக்கிறது என்ற அணியில் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், ஆர்ஜே.நர்மதா, குறிஞ்சிப்பாடி திரு.நவஜோதி ஆகியோரும், செதுக்குகிறது என்ற அணியில் திரு.தாமல் சரவணன், திருமதி.கார்த்திகா ராஜா, திரு.கோவிந்த நாராயணன் ஆகியோரும் பங்கேற்று சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியை ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று காலை 9:00 மணிக்கு காணலாம்.
“புத்தம் புதுக்காலை”
ஜெயா டிவியில் பொங்கல் தினத்தன்று காலை 8:00 மணிக்கு புத்தம் புதுக்காலை என்ற இசை சங்கம நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் யுவன்ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த பல்வேறு வெற்றிப்படங்களில் பணியாற்றியிருக்கும் இளம் வயலின் இசைக்கலைஞர் மனோஜ் குமார் தன் குழுவினருடன் இணைந்து நமக்கு பிடித்தமான ஹிட் பாடல்களை வயலினில் இசைத்து ரசிக்க வைத்திருக்கிறார். அவளுக்கென்ன அழகிய முகம், பார்த்த ஞாபகம் இல்லையோ போன்ற பழைய பாடல்களில் தொடங்கி, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என ஒவ்வொரு தலைமுறையினராலும் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை துள்ளலாக இசைத்திருக்கிறார்.
“பொங்கலோ பொங்கல்”
ஜெயா தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் செப் தீனா, செப் சுஜா மற்றும் பாடகர் வேல்முருகன் தன் இசைக்குழுவினருடன் கொண்டாடும் நிகழ்ச்சி “பொங்கலோ பொங்கல்”. இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் பொங்கல் தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சி ஆற்றங்கரை முனீஸ்வரர் ஆலயத்தில் ஜெயா டிவியின் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற இல்லத்தரசிகள் பொங்கல் சமைத்து தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவது தான் இதன் சிறப்பு.மேலும் இசைக்கல்லூரி மாணவர்களின் இசைக்குழு மற்றும் நடன குழுவுடன் அசத்தும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இந்நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார்.
‘ L for Lollu’
ஜெயா தொலைக்காட்சியில் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகும் ‘L for லொள்ளு’ எனும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியில் நடிகர் M S பாஸ்கர் மற்றும் அவரது மகன் ஆதித்ய பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தந்தை மகனின் பாசத்திற்க்கு நடுவில் நட்சத்திர உருவ ஒற்றுமை கொண்ட கலைஞர்கள் கலந்து கொண்டு அடிக்கும் லூட்டியுடன், தமிழ் வார்த்தை விளையாட்டு, டவுட் மன்னன் திண்டுக்கல் சரவணனனின் கேள்விகள் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் திங்கள் கிழமை, மாட்டுப்பொங்கலன்று இரவு 9.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
“அழகிய தமிழ் மகள்”
ஜெயா டிவியில் மாட்டுப்பொங்கல் அன்று காலை 8:00 மணிக்கு ”அழகியதமிழ்மகள் ” நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரையில் பிரபலமாக கலக்கி கொண்டிருக்கும் பாட்டிகள் காகா முட்டை பட புகழ் சாந்திமணி, கோவை கமலா, ராக்ஸ்டார் ரமணி, விஜயலட்சுமி மற்றும் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகள் ஸ்ரீதேவி, ஷாலினி, சாசனா, சந்திரலேகா ஆகியோர் கலந்து கொண்ட ஜாலியான கேம் ஷோதான் இந்த ” அழகிய தமிழ் மகள் ” நிகழ்ச்சி….
பொங்கலன்று வீட்டிலுள்ள பாட்டி, பேத்திகளுக்கு இடையே உள்ள பிணைப்பு, இல்லங்களில் நடக்கும் அனைத்து களேபரங்களையும் ஒருமித்தமாக சிரிப்பு நிகழ்ச்சியாக கொடுத்திருப்பது தான் இந்த ” அழகிய தமிழ் மகள் ” நிகழ்ச்சி காணத்தவறாதீர்கள்.