மாயாவின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஐஸ்வர்யா..!

ஐஸ்வர்யா – சின்னதம்பியின் திருமணம் நடக்குமா..?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.

பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பொன்னியின் மகளான ஐஸ்வர்யா – சின்னதம்பியின் காதல் கல்யாணத்தில் முடியுமா என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

ஐஸ்வர்யாவின் காதலை சின்னதம்பி ஏற்க மறுக்க, சின்னதம்பிக்கும் அவனது மாமன் மகளுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, ஐஸ்வர்யாவின் மனதை மாற்றும் மாயா ஐஸ்வர்யாவை, சின்னதம்பிக்கு திருமணம் முடித்து வைப்பதாக நாடகமாடி தனது மாய வலையை வீசுகிறாள். மாயாவின் வலையில் ஐஸ்வர்யா சிக்க, சின்னதம்பியை கொன்றுவிட்டு ராஜாராம் மீது பழிபோட திட்டம் தீட்டும் மாயாவின் திட்டம் நிறைவேறியதா? ஐஸ்வர்யா – சின்னதம்பியின் திருமணம் நடக்குமா? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *