கோடை விடுமுறையில் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னாவில் இருந்து பெங்களூர் வரை செல்லும் பீரிமியம் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண்.22353 கொண்ட இந்த பிரிமியர் ரயில் மே 21, 28, ஜூன் 4, 11,18 மற்றும் 25 ஆகிய வியாழக்கிழமைகளில் பாட்னாவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிமைகளில் மதியம் 1.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். பின்னர் அன்று இரவு 6.55 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

இதேபோல், மே 24, 31, ஜூன் 7,14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் வண்டிஎண். 22354 பிரிமியம் ரயில் அன்றைய தினம் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்து பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.

இந்த ரயில் சோக்கி, ஜபல்பூர், நாக்பூர், விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தேவையான பயணிகள் இந்த பிரிமியம் ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

English Summary: Premium Trains will run between Patna to Bangalore via Chennai Central. Sokki, Jabalpur, Nagpur, Vijayawada and Chennai Central are the stations the trains will stop.