தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விவரங்களை, இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஹக்கீம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போதே தனியார் பள்ளிகளில் கல்வி சேர்க்கைக்கான கட்டணம் வசூல் உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டியிருந்தார். இதனை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்தது.

தமிழகத்திலுள்ள 10,000 பள்ளிகளில் ஏற்கனவே 5,500 பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பள்ளிகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்திடும் பணி நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், தனியார் பள்ளிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் கல்வி கட்டணங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

English Summary: Private schools will have to declare fee structure on their website.