பிளிப்கார்ட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான அனைத்துவிதமான நிதி விசாரணைகளையும் வால்மார்ட் முடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க 1,000 கோடி டாலர் முதல் 1,200 கோடி டாலர் வரை கொடுப்பதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கி இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த இணைப்பு முழுமையாக முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என்றாலும், முதலீட்டாளர்களுக்கும் பிளிப் கார்ட் நிறுவனத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிதி தகவல்களை சரி பார்ப்பதற்காக வால்மார்ட் தங்களுடைய உயரதிகாரிகளை அனுப்பியது. வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்க டைகர் குளோபல், ஆக்செல் பார்ட்னர்ஸ் மற்றும் நாஸ்பர்ஸ் ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் அமேசான் நிறுவனமும் பிளிப்கார்டை வாங்க இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது.
English Summary: Progress in purchasing of flipkart.