விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் அறிமுகப்பாடலுக்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் செட்டில் வரும் 30ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த இயக்குனர் சிம்புதேவன் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து அடுத்தகட்டமாக ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெறவுள்ள ஒரு முக்கிய பாடல் காட்சிக்காக படக்குழுவினர் சீனா அல்லது கம்போடியா நாட்டிற்கு செல்லவுள்ளனர்.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, பிரபு, ஸ்ரீதேவி,சுதீப், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பி.டி.செல்வகுமார் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
English Summary : Vijay next film “Puli” is now filming in China with crew mates.