எப்படி இருக்கும் 2025 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்
2025 – ல் அரசியல் மாற்றங்களும், முன்னேற்றங்களும் யாருக்கெல்லாம், எந்த ராசிக்காரர்கள் செல்வ வளம் பெறப்போகிறார்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யாரெல்லாம், கிரகப் பெயர்ச்சிகள் யாருக்கெல்லாம் சாதகம் மற்றும் இந்த வருடம் வேலை மாற்றங்கள் கிடைக்குமா என துள்ளியமாக கணித்தும் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த 2025 எப்படி இருக்கும் என்ற கணிப்பினையும் முன்கூட்டியே கணித்து கூறும் பிரபல ஜோதிடர்கள் திரு. மகேஷ் ஐயர்,திரு.கணியர், திரு.பஞ்சநாதன், திரு.விஜய்சேதுநாராயணன் மற்றும் திரு.நாஞ்சில் K.இசக்கிமுத்து இவர்களுடன் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று தங்களின் சந்தேகங்களைக் கேட்டு அறிந்த ”எப்படி இருக்கும் 2025”. இதனை தொகுப்பாளர் சரண்யா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக காலை 8.30 மணி முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
Reddin Kingsley – ன் (உண்மைய சொன்னா Feel பண்ணுவீங்க)
பிரபல நட்சத்திர தம்பதிகளான திரு. ரெடின் கிங்ஸ்லி மற்றும் திருமதி. சங்கீதா பங்கு பெற்று தங்களின் காதல் அனுபவம், சினிமாவில் தான் சந்தித்த மற்றும் தனக்கென பாணியை ஏற்படுத்திய அனுபவம், தங்களின் எதிர்காலத்திட்டங்கள் என கலகலப்பாக பாடியும், தன்னுடைய வெற்றிபெற்ற வசனங்களைப் பேசியும் அசத்திய “உண்மைய சொன்னா Feel பண்ணுவீங்க”. இதனை தொகுப்பாளர் பிருந்தா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.