சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.3) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.3) காலை 7.50 முதல் பிற்பகல் 2.35 மணி வரை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, இரு மார்க்கத்திலும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதன்பிறகு, சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணிக்கு, முதல் மின்சார ரயில் புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.40, 10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதன்பிறகு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.