தமிழக வாக்காளர்களுக்கு கருப்பு வெள்ளையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த வாக்காளர் அடையாள அட்டைகளுக்கு பதிலாக வண்ண வாக்காளர் அட்டை கொடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த வண்ண வாக்காளர் அட்டையிலும் வாக்காளர்களின் புகைப்படங்கள் கருப்பு, வெள்ளை நிறத்தில் இருப்பதால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் 39 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலைய்யில். 2014ஆம் ஆண்டுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு கருப்பு, வெள்ளை நிற புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளுக்கு பதிலாக புதியதாக ஏடிஎம் வடிவிலான பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கருப்பு, வெள்ளை நிற அட்டைகளை வைத்திருக்கும் வாக்காளர்கள் ரூ.25 கட்டணத்தில் புதிய வண்ண வாக்காளர் அட்டை பெற தமிழகம் முழுவதும் 363 சிறப்பு முகாம்கள் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 3 இடங்களில் இந்த முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
வண்ண அட்டைகளை பெறுவதற்கு பழைய வாக்காளர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரக் கணக்கான வாக்காளர்கள் விண்ணப்பித்து வண்ண அட்டைகளை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த வாக்காளர் அட்டைகள் மட்டுமே வண்ணத்தில் உள்ளன. புகைப் படங்கள், பழைய அட்டையில் இடம் பெற்றுள்ளதைப் போல் கருப்பு, வெள்ளை நிறத்திலேயே உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து வியாசர்பாடியைச் சேர்ந்த ‘தேவை’ என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எ.த.இளங்கோ அவர்கள் கூறியபோட்து, “எங்கள் பகுதியில் வசிப்போர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் அட்டை பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் பெற்றுள்ள வண்ண அட்டையில் உள்ள புகைப்படங்கள் கருப்பு, வெள்ளை நிறத்தில்தான் உள்ளன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.
முதலில் புகைப்படத்தை மாற்ற, புதிய வண்ண புகைப்படத்துடன் விண்ணப்பித்துவிட்டு, புகைப்படம் மாறிய பிறகு, வண்ண வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண் டும் என்று மாவட்ட தேர்தல் நிர்வாகமோ, மாநில தலைமைத் தேர்தல் நிர்வாகமோ, தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அதற்கான வசதிகளை சிறப்பு முகாம்களிலாவது செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அட்டையை மட்டும் வண்ணத்தில் கொடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “பழைய வாக்காளர்கள் முதலில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலை மைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “பழைய வாக்காளர்கள் முதலில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு பின்னர், அவர்கள் வண்ண அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்” என்று கூறினார்.
English Summary: Rajeshlakkani description of the new issue of voter card color.