ரேசன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கென ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பின்னர் அதை அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி கொடுக்கும் நடைமுறை இதுவரை இருந்தது. தற்போதைய இண்டர்நெட் உலகில் அனைத்துமே எளிதில் இணையதளங்கள் மூலம் சாதித்து வரும் நிலையில் ரேசன் கார்டு முகவரி மாற்றத்தையும் இணையதளங்களில் முடிக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இன்று சட்டமன்றத்தில் 2016-2017ஆம் ஆண்டுகான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் அறிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இணையதளம் வழியாகவே ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது’ என்று கூறினார்.
English Summary :Ration card address change through the Internet .Government Announcement