தமிழ்நாடு முழுவதும் அரசின் அனைத்துவித நலத்திட்டங்களும் ரேஷன் கடைகளின் மூலமாகத்தான் மக்களை சென்று அடைகிறது. இதில் ரேஷன் கடை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். இவர்கள் தங்களின் வழக்கமான பணியினை தொடர்ந்து அரசின் சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார்கள். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமலாக இருக்கும் ரூ.1,000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.
இதில் விடுமுறை தினமான ஜூலை 30ஆம் தேதி அன்று அனைத்து ரேஷன் கடைகளும் அரசின் உத்தரவின் கீழ் செயல்பட்டன. இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆகிய இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை தினம்,
எனவே தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் விடுமுறையில் இருக்கும் என்றும், பொதுமக்கள் விடுமுறை தினங்களில் ரேஷன் கடைகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.