ரயிலில் பயணம் செய்யும் வயதானவர்கள் என்று கூறப்படும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண சலுகையை பெற மூத்த குடிமக்கள் தங்கள் வயது குறித்த சான்றிதழை கண்டிப்பாக பயணத்தின்போது எடுத்து செல்ல வேண்டும். இந்நிலையில் ஒருசிலர் தவறான வயதை காண்பித்து மூத்த குடிமக்கள் சலுகையை பயன்படுத்தி வருவதாக ரயில்வே துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதனால் இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ரெயில்வே வாரியத்தின் சமீபத்திய அறிவுறுத்தலின்படி, தவறான வயதை குறிப்பிட்டு ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தில் பயணிப்பவர்களிடம் மூத்த குடிமக்களுக்கான சலுகை அல்லாத கட்டண வேறுபாட்டு தொகை மற்றும் அபராத தொகை வசூலிக்கப்படும்.
மேலும் மூத்த குடிமக்களுக்கான வயதை தவறாக குறிப்பிட்டு சலுகை ஒதுக்கீட்டில் இருக்கை பெற்றாலும் டிக்கெட் பெறாமல் பயணிப்பதற்கு சமமாக கருதப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Referring to the wrong age for senior citizens offer a fine if the train journey. with effect from February 1.