சென்னை: சென்னை பல்கலையின் நவம்பர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் பட்டம் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நவம்பரில் நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.
முதுநிலை படிப்பில் மறுமதிப்பீடு தேவைப்படுவோர் தங்களின் கல்லுாரிகள் வழியே வரும், 6 முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டம் படிப்போர் மறுகூட்டலுக்கு வரும், 6 முதல், 12 வரை, கல்லுாரிகள் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலை படிப்பை 2015 – 16 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன் முடித்தவர்கள் சென்னை பல்கலையின் இணைய தளத்தில் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்து உள்ளது.