freedom25129216கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகிலேயே மிகக்குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த ரிங்கிங் பெல் என்ற நிறுவனம் அறிவித்தது. ரூ.251/க்கு ஸ்மார்ட்போன் என்ற விளம்பரத்தை பார்த்த ஏராளமான பொதுமக்கள் முன்பதிவு செய்ய போட்டி போட்டதால் இந்த நிறுவனத்தின் இணையதளமே முடங்கியது.

இந்நிலையில் இந்த போனுக்காக முதலில் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பெர்களுக்கு அவர்கலுடைய பணத்தை திருப்பி அளித்துவிட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிங்கிங் பெல்ஸ் தலைமை நிர்வாகி அசோக் சத்தா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”வாடிகையாளரிடம் போனை கொடுத்துவிட்டு பணம் பெற(cash on delivery) நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ரிங்கிங் பெல் நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மேலும் இந்த நிறுவனத்தின் மீது காப்புரிமை தொடர்பாக புகார்களும் எழுந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரீடம் 251 போனின் புரோடோடைப்பை கேட்டுள்ளதாகவும், சக ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை பற்றி விசாரணை நடத்தும்படி கோரியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி உ.பி அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

30ஆயிரம் பேர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ள இந்த நிறுவனம் மீதியுள்ள பேர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்குமா? அல்லது வாக்களித்தபடி ஸ்மார்ட்போனை வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

English summary: Ringing Bells to refund Freedom 251 payments to 30,000 peoples.