தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்கப் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள், வாக்காளர் அட்டையை பயன்படுத்த வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை கொண்டு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.

1. கடவுச்சீட்டு
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை
4. தபால் நிலையம் அல்லது வங்கி கணக்குப் புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது)
5. பான் கார்டு
6. ஆதார் அட்டை
7. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டு அடையாள அட்டை மகாத்மா காந்தி
8.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அட்டை

மேற்கூறியுள்ள ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் ஓட்டுபோட அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

English Summary : There should be enough documents for voting in RK Nagar by-election in Chennai.