தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடுமையான போட்டியை சமாளித்து லாபகரமாக இயங்கி வரும் நிறுவனமான பி.எஸ்.என்.எல், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டதன் காரணமாக ரூ.613 கோடி செலவினங்களை சேமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் அதிக அளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு ஆற்றல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இந்த தொகை சேமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி நுகர்வை குறைப்பதற்காக கூலிங் தொழில்நுட்பம், பிஇஇ சான்று பெற்ற பொருட்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல் மற்ற அரசு நிறுவனங்களும் சேமிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ரூ.613 கோடியை பி.எஸ்.என்.எல் சேமித்துள்ளதால் அதன் பயன் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் போய்ச்சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : BSNL saved Rs .613 crore through energy conservation measure.