சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தா்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பணியகம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜையையொட்டி, விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்களின் வசதிக்காக இருமுடியை தங்களுடனேயே எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது.
இது, அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும், எக்ஸ்ரே, வெடிபொருள் பரிசோதனை, நேரடி பரிசோதனை ஆகியவற்றை விமான பாதுகாப்புக் குழுவினர் மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.