ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி ஐயப்பன் பக்தர்களின் வசதியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து வரும் நிலையில் இவ்வருடமும் மொத்தம் 27 சிறப்பு ரெயில்கள் இயக்கவுள்ளதாக தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. ஐதராபாத்தில் இருந்து டிசம்பர் 11, 12, 15, 16, 19, 20, 23, 24, 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16-ந் தேதிகளில் பிற்பகல் 3.55, 3.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டணத்துடன் கூடிய தட்கல் சிறப்பு ரெயில்(வ.எண்: 07109/07133), அடுத்தநாள் இரவு 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
2. கொல்லத்தில் இருந்து டிசம்பர் 9, 16, 13, 17, 18, 21, 23, 25. 26 மற்றும் ஜனவரி 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18-ந் தேதிகளில் பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் தட்கல் சிறப்பு ரெயில்(07110/07134), மறுநாள் காலை 10.30 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும்.
3. நிஷாமாபாத்தில் இருந்து டிசம்பர் 7, 14 மற்றும் 21-ந் தேதிகளில் பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07613), மறுநாள் இரவு 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
4. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 14, 22 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07614), மறுநாள் காலை 11.05 மணிக்கு நிஷாமாபாத்தை சென்றடையும்.
5. மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 13-ந் தேதி இரவு 7.40 மணிக்கு இயக்கப்படும் தட்கல் சிறப்பு ரெயில்(07275/07221), மறுநாள் இரவு 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
6. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07276), மறுநாள் மாலை 5.45 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தை சென்றடையும்.
7. காக்கிநாடாவில் இருந்து டிசம்பர் 15, 16, 18, 19, 21, 22, 24, 25 மற்றும் ஜனவரி 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 13, 14-ந் தேதிகளில் இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07211), 3-வது நாள் நள்ளிரவு 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
8. கொல்லத்தில் இருந்து டிசம்பர் 17, 18, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் ஜனவரி 3, 4, 6, 7, 9, 10, 12, 13, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07212), மறுநாள் காலை 6.15 மணிக்கு காக்கிநாடாவை சென்றடையும்.
9. நர்சாபூரில் இருந்து டிசம்பர் 30, 31-ந் தேதிகளில் இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07217), 3-வது நாள் நள்ளிரவு 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
10. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து ஜனவரி 1, 2-ந் தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07218), அடுத்தநாள் காலை 6.40 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
11. விஜயவாடாவில் இருந்து டிசம்பர் 7, 10 மற்றும் 23-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07219), அடுத்தநாள் 3-வது நாள் 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
12. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 9, 22 மற்றும் 25-ந் தேதிகளில் காலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07220), அடுத்தநாள் காலை 4 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.
13. மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 17, 20-ந் தேதிகளில் இரவு 10.05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07221), 3-வது நாள் நள்ளிரவு 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
14. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 12, 19-ந் தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07222), அடுத்தநாள் காலை 5.45 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தை சென்றடையும்.
15. விஜயவாடாவில் இருந்து ஜனவரி 3, 6-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07213), 3-வது நாள் காலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
16. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து ஜனவரி 5, 14-ந் தேதி காலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்(07214), மறுநாள் காலை 7.30 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.
17. மச்சிலிப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 9, 12-ந் தேதி இரவு 11 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07215), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
18. கொல்லத்தில் இருந்து ஜனவரி 8, 11-ந் தேதி காலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07216), அடுத்த நாள் காலை 9 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தை சென்றடையும்.
19. அவுரங்காபாத்தில் இருந்து டிசம்பர் 8, 22-ந் தேதி காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07505), 3-வது நாள் காலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
20. அகோலாவில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07507), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
21. அடிலாபாத்தில் இருந்து டிசம்பர் 29-ந் தேதி பகல் 12 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07509), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
22. சிர்பூர்கழநகரில் இருந்து ஜனவரி 4, 10-ந் தேதி இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07111), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
23. கொல்லத்தில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 12-ந் தேதி காலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07112), மறுநாள் பகல் 12 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும்.
24. கரீம்நகரில் இருந்து டிசம்பர் 28-ந் தேதி இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07113), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
25. கொல்லத்தில் இருந்து டிசம்பர் 10, 17, 24 மற்றும் 31-ந் தேதிகளில் காலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07506), அன்றைய தினம் இரவு 11.15 மணிக்கு திருப்பதியை சென்றடையும். மீதி இரண்டு சிறப்பு ரயில்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளது.
English summary-Sabarimala special trains