Sankara-Netralaya-28102015சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் செயல்பாடுகள், சிகிச்சை முறை ஆகியவற்றை அண்மையில் கொரியத் தூதர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொரியா சங்கம், “குட்மார்னிங்’ தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 4 பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவுக்கான கொரியத் தூதர் கயோங்சூ கிம் ஆகியோர் இந்த ஆய்வினை செய்தனர்.

ஆய்வு செய்த பிரதிநிதிகளுக்கு சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் செய்யப்படும் சிகிச்சை முறைகள், ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவச் சேவைகள், நடமாடும் கண் அறுவைச் சிகிச்சை யூனிட் ஆகியவை குறித்து விடியோ காட்சிகள் மூலமும், விளக்கங்கள் மூலமும் எடுத்துரைக்கப்பட்டன.

இதையடுத்து, மருத்துவமனையின் செயல்பாடுகளுக்காக கொரிய சங்கமும், “குட்மார்னிங்’ நிறுவனமும் இணைந்து ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கின. ஆய்வின்போது மருத்துவமனையின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் உடனிருந்தார்.
English summary-Inspection conducted at Sankara Netralaya chennai