சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, சந்திரோதய கவுரி விரதம், உமா விரதம்.
வழிபாடு: விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பு ..! விநாயக விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றான பதவி பெற்றதால் சங்கட ஹர சதுர்த்தி விரதம் அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
திதி: திரிதியை (தேய்பிறை)
நட்சத்திரம்: கார்த்திகை 10.51 (A.M 10.22)
சந்திராஷ்டமம்: விசாகம்
இசுலாமிய நாள்: சஃபர் 17
விரத, விசேஷங்கள்: சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா