சவீதா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்த “இன்ஜினீயரிங் ப்ராஜெக்ட் எக்ஸ்போ 15” என்ற கண்காட்சி அக்கல்லூரியில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை படிக்கும் மாணவர்களின் 250-க்கும் மேற்பட்ட புதிய படைப்புகள் இடம்பெற்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை காண வந்திருந்தனர். அவர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சவீதா கல்லூரி நிர்வாகத்தால் இலவச வாகனங்கள் இயக்கப்பட்டன.
“இன்ஜினீயரிங் ப்ராஜெக்ட் எக்ஸ்போ 15” என்ற இந்த கண்காட்சியை சவீதா பல்கலைக்கழக வேந்தர் என்.எம்.வீரய்யன் தொடங்கிவைத்தார். சிம்சன் நிறுவன துணைத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
கண்காட்சியை சிலமணி நேரம் பார்வையிட்ட அவர்கள் மாணவர்களின் திறமைகளை பாராட்டியதோடு இதுபோன்ற கண்காட்சியை பார்ப்பதால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பெரும் பயன் பயன்பெறுவார்கள் என்று கூறினர்.
இந்த கண்காட்சியில் ரோபாட்டிக்ஸ், நுண்ணுணர்வு கருவிகள், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்பான சாதனங்கள், முப்பரிமாண பிரின்டிங் மற்றும் ஸ்கேனிங் கருவிகள், சூரிய சக்தியில் இயங்கும் கார்கள், பல்வேறு வாகன சேசிஸ்கள், மொபைல் அப்ளிகேஷன்கள் ஆகிய புதிய கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை மிகவும் கவர்ந்த அம்சங்கள் ஆகும்.
English Summary : Saveetha college students Expo Exhibition