சென்னை: நிதியாண்டு முடிவதால் வரும் 23, 30 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடக்கும் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு வழியாக நடப்பு நிதியாண்டில் 11 ஆயிரத்து 512 கோடி ரூபாய் வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரி வரை 9,500 கோடி ரூபாய்தான் வருவாய் கிடைத்துள்ளது. வருவாய் இலக்கை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டு வரும் 31ல் முடிகிறது. அதனால் இந்த மாதத்தில் நிறுவனங்கள் தனி நபர்கள் சொத்து பரிமாற்றம் தொடர்பாக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அவர்கள் வசதிக்காகவும் வருவாய் இலக்கை எட்டும் வகையிலும் விடுமுறை நாளான வரும் 23, 30ம் தேதி சனிக்கிழமைகளிலும் சார் – பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பத்திரப் பதிவுக்கான ‘டோக்கன்’கள் வழக்கம் போல் வழங்கப்பட உள்ளன.