சமீபத்தில் அஞ்சல் துறையால் அறிமுகம் செய்யப்பட்ட ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. பெற்றோர்கள் தங்கள் செல்லமகளின் எதிர்காலத்திற்காக இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய முன்வந்தனர்.
இந்நிலையில் இதுவரை 10 வயதுக்குள் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேரமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தில் சேரலாம் என்றும் 12வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை செல்வ மகள் திட்டத்தில் இணையலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
இது குறித்து மெர்வின் அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ. 2 ஆயிரத்து 328 கோடி அளவுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தக் கணக்குகளை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் சேர முடியும். ஆனால், வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை 12 வயதான குழந்தைகளும் இத்திட்டத்தில் இணையலாம். எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கான கணக்குகளை தொடங்கலாம்” என்று கூறியுள்ளார்.
English summary-New scheme to join selvamagal semippu thittam until Dec 12,2015