தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களும், வட மாநிலங்களில் நான்கு நாட்களும் வங்கி விடுமுறை வரவுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் முன்கூட்டியே வங்கி தொடர்பான பணிகளை முடித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மார்ச் 24ஆம் தேதி ஹோலி பண்டிகை, மார்ச் 25ஆம் தேதி புனித வெள்ளி தினம், மார்ச் 26ஆம் தேதி நான்காவது சனி மற்றும் அதற்கு அடுத்த நாள் ஞாயிறு என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக வருகிறது. ஆனால் இந்த நான்கு நாட்கள் விடுமுறை வட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்
தமிழகத்தை பொறுத்த வரை ஹோலி பண்டிகை தினமான மார்ச் 24ஆம் தேதி வங்கிகள் இயங்கும் என்பதால் மார்ச் 25 முதல் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாகும். வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் காசோலை, வரைவோலை பரிமாற்றங்கள், பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற பரிவர்த்தனைகளை பொதுமக்களும், வியாபாரிகளும் விடுமுறைக்கு முன்பே வைத்துக்கொள்ளும்படி வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
மேலும் இந்த விடுமுறையால் ஏ.டி.எம் மையங்களில் பணம் காலியாகும் வாய்ப்புகள் இருப்பதால் போதுமான பணத்தை ஏ.டி.எம்களில் நிரப்ப வங்கி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை ஏ.டி.எம்.களில் விடுமுறைக்கு முந்தைய தினமே எடுத்து வைத்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றது.
English Summary: Series of three-day holiday for the banks. The impossibility of ATM shortage.