சிம்பு நடித்த வாலு திரைப்படம் பல தடைகளை தாண்டி இன்று முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. மூன்று வருடம் கழித்து சிம்பு நடித்த படம் ஒன்று வெளியாகவிருப்பதால் அவருடைய ரசிகர்கள் இன்று ‘வாலு’ திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் காலை முதலே குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும், அந்த பிரச்சனைகளை தீர்க்க தனக்கு உதவியவர்கள் குறித்தும் சிம்பு மனம் விட்டு ஒருசில கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவற்றின் ஒருசில பகுதிகளை இப்போது பார்போம்.

‘வாலு’ படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியால் எனக்கு உண்மையானவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு சம்பவம் இல்லாமல் போயிருந்தால் எனக்கு யாரெல்லாம் எதிரி என்று தெரியாமலேயே போயிருக்கும்.

ஜூலை 17ஆம் தேதி படம் ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் விட்டு விட்டு படம் ரிலீஸாக ஒரு வாரம் மட்டுமே இருக்கும்போது ‘வாலு’ படத்தை வெளியிடாமல் தடுக்க வேண்டும் என்று நின்றார்கள். இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டுபிடித்தேன்.

விஜய் சாருடன் நான் நெருக்கமானவன். நாங்கள் இருவருமே இளம் வயதில் சினிமாவுக்குள் வந்தவர்கள். விஜய் சார் யாரிடமும் பேசாமல் இருக்கும் இடங்களில்கூட என்னிடம் மட்டுமே பேசி யிருக்கிறார். நாங்கள் சகோதரர்களாகத்தான் பழகி வருகிறோம். நான் ஒரு அஜித் ரசிகன் என்று சொன்னதால் எனக்கு விஜய்யை பிடிக்காது என்று பலரும் அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். ‘தலைவா’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது நான் அவரிடம் பேசினேன். இப்போது ‘வாலு’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது தனக்கு நெருக்கமான விநியோகஸ்தர்களிடம் பேசி இதைத் தீர்க்குமாறு அவர் கூறியுள்ளார்.

வாலு’ விஷயத்தில் அஜித் சார் வெளியில் வந்து பேச வேண்டும் என்பது அவசியமில்லை. அஜித் சாரை அப்பா சந்தித்தபோதுகூட, ‘இந்த பிரச்சினைக்காக கவலைப் பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து சிம்பு வந்துவிடுவார்’ என்று கூறியிருக்கிறார். மேலும் ‘வாலு’ படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி அஜித் சாரின் நெருங்கிய நண்பர். அதனால் கூட அஜித் சார் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்.

இவ்வாறு சிம்பு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

English Summary : Simbu explains the role played by Ajith and Vijay to release “vaalu”.