சென்னை நகரில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் உள்பட ஆறு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட 6 இன்ஸ்பெக்டர்கள் விபரங்கள்:
1. சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் ஜவஹர் ஆர்.கே. நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2. பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த தளவாய்சாமி ஆர்.கே.நகர் குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. மாங்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தண்டையார்பேட்டை குற்றப்பிரிவுவுக்கு மாற்றப்பட்டார்.
4. புழல் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தேவராஜு கொருக்குப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டார்.
5. கானாத்தூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அசோகன் கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
6. அம்பத்தூர் தொழிற்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய புகழேந்தி புது வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் ஆர்.கே.நகரில் இன்ஸ்பெக்டர்களாக இருந்த தேவேந்திரன் (சட்டம்–ஒழுங்கு), செல்வின் சாந்தகுமார் (குற்றப்பிரிவு), தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த பலவேசம், கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் கோவிந்த் (சட்டம்- ஒழுங்கு), சுரேஷ் குமார் (குற்றப்பிரிவு) ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் வேறு போலீஸ் நிலையங்களில் பணி ஒதுக்கப்படும்.
மாற்றப்பட்ட அனைவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary: Six Police Inspectors were transferred inside Chennai.