சென்னை: மின் கட்டண வசூலில் முறைகேடுகளை தடுக்க, ‘டெபிட், கிரெடிட் கார்டு’ பயன்படுத்தும், டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் வசூலிக்குமாறு, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் பலர், ரொக்க பணமாக, மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.
இந்நிலையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வரும், சென்னை, கோவை உட்பட, 12 மாநகராட்சிகளிலும், மின் கட்டணத்தை, ‘டிஜிட்டல்’ முறையில் வசூலிக்குமாறு, மின் வாரியத்தை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அனைத்து மாநகராட்சிகளிலும், ஸ்மார்ட் சிட்டி பணிகள், துவக்க நிலையில் உள்ளன; அவை, முழுமை பெற்றதும், மின் கட்டணமும் முழுவதுமாக, டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும்’ என்றார்.