வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் ஒரு புதிய கண்டுபிடிப்பு அறிமுகமானால் ஏற்கனவே உள்ள பழைய கண்டுபிடிப்பு காலாவதியாகி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. செல்போன்களின் வரவு பேஜர்களுக்கும், டிவிடியின் வரவு ஆடியோ, வீடியோ கேசட்டுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டு போன்கள் மிக வேகமாக பரவி வருவதால் இண்டர்நெட்டில் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் சிரமம் இன்றி உள்ளது.
இந்நிலையில் ஆண்ட்ராய்டு போனை விஞ்சும் அளவுக்கு தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. அதுதான் எப்.எஸ்.ஓ. எனப்படும் வெற்று வெளியில் ஒளி மூலமாக தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் கருவியாகும். இந்த கருவியின் மூலம் ஒளி வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும். இந்த கருவியின் மூலம், அகச்சிவப்பு கதிர்களின் உதவியுடன் வயர் இணைப்பு இல்லாமல் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. குறைந்த செலவில், குறைந்த மின்சார பயன்பாட்டில், இந்த முறையில் தகவல்களை பரிமாறலாம். அமெரிக்காவின் நார்த்வெஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த கருவியை உருவாக்கி வருகிறார்கள்.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முக்கியமான 2 சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக அகச்சிவப்பு கதிர்கள் கண்களுக்கு ஆபத்தானவை. மேலும் சுற்றுச்சூழல்கள் இந்த ஒளிக்கற்றைகளை தடுத்தாலோ, சிதறிடித்தாலோ தகவல் பரிமாற்றம் பாதிப்படையும். மூடுபனி, புகை, மேகம் போன்றவை அகச்சிவப்பு ஒளிக்கற்றையை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் எப்.எஸ்.ஓ. தொழில்நுட்பத்தில் தகவல் பரிமாற்றம் செய்யும் கருவி தயார் நிலைக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர் ராஸேகி தலைமையிலான ஆய்வுக் குழுவினர். இந்த கருவி பிரபலம் அடைந்தால் ஸ்மார்ட்போன் விற்பனை பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary : Smartphones push back to new tool.?