ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இழிவைப் பெற்றுக்கொடுத்த பந்து சேத விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்ததையடுது 2018 ஐபிஎல் தொடரிலும் இந்த இரண்டு வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், சன் ரைசர்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னரும் விலகியது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, “கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை செய்த வார்னர், ஸ்மித் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு ஆட முடியாது, நாமும் அவர்களுக்குத் தடை விதிக்கிறோம். முதலில் ஐசிசி முடிவுக்காகக் காத்திருந்தோம், பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தற்போது நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
இந்த சீசனுக்கு அவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான மாற்று வீரர்களை அந்தந்த அணிகள் அறிவிக்கும். அவசரப்பட்டு நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை, நின்று நிதானித்தே முடிவெடுத்தோம்” என்றார்.
English Summary: Smith and Warner Ban for IPL 2018: BCCI