தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னை ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் தற்போதே தொடங்கிவிட்டது. ஆனால் அதை சரிசெய்யும் வகையில் அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்நிலையில் மழை தற்போது மழை இல்லாத காரணத்தால், காற்றில் ஈரப்பதும் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேக மூட்டங்களும் காணப்படாததால் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்துள்ளது. குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ளான தமிழக பகுதியில் காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்கள் வறண்ட வானிலையே காணப்படும். இதனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் சில தினங்களுக்கு வெயில் சக்கபோடு போடவுள்ளது.