‘என்னை அறிந்தால்’ வெற்றி படத்திற்கு பின்னர் அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே அஜீத் நடித்த மங்காத்தா, பில்லா 2, என்னை அறிந்தால் ஆகிய படங்களின் இசை வெளியீட்டு உரிமையை கைப்பற்றி நல்ல லாபம் சம்பாதித்த சோனி நிறுவனம் ‘தல 56’ படத்தின் இசை உரிமையையும் பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. இந்த தகவலை சோனி நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஏ.எம்.ரத்னம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
English Summary: Sony acquires music rights of “Thala 56”.