கோடை விடுமுறையையொட்டி ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை தாம்பரத்திலிருந்து கொல்லத்துக்கு (வண்டி எண் 06027) வாரம் இருமுறை திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சிறப்பு கட்டண ரயில் வரும் 9ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த நாட்களில் இந்த ரயில் தாம்பரத் திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல் கொல்லத்திலிருந்து (வண்டி எண் 06028) செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை என வாரம் இருமுறை வரும் 10ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி வரை இயக்கப்படும்.

இந்த ரயில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.இதில் ஏசி பெட்டி 1, ஸ்லீப்பர் கிளாஸ் 6, 2ம் வகுப்பு சேர்கார் 2, பொது 2ம் வகுப்பு 3 மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமன், புனலூர், ெகாட்டாரக்கரா மற்றும் குண்டரா ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.

பகுதி தூரம் ரயில்கள் ரத்து: விழுப்புரம்மாம்பலப்பட்டு மற்றும் விழுப்புரம்காட்பாடி (வண்டி எண் 56883, 56884)இடையே தண்டவாளத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (6ம் தேதி) காட்பாடிவிழுப்புரம்காட்பாடி பயணிகள் ரயில் விழுப்புரம்மாம்பலப்பட்டுவிழுப்புரம் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(வண்டி 16779)15 நிமிடம் தாமதமாக வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Southern Railway announces summer special trains – Tamilnadu.