சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற ஜூலை 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 1415 ரேஷன் கடைகள் உள்ளது. இவற்றில் 500 பேருக்கு ஒரு தன்னார்வலர் என நியமித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும். சென்னையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்களை அடையாளம் காண ஜூலை 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளதாக அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *