சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்தில் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதைக் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஒன்றை நடத்தி வருகிறது.
இதுபோன்ற கலந்தாய்வு சென்னையில் வருடந்தோறும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்காக நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடமும் அதே போன்று நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் தேர்வு முடிவு வெளியான சில நாள்களில் அவமானம் மற்றும் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடைபெருவதை தடுக்க பெண் போலீஸார், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களின் உதவியோடு நடைபெற்று வரும் இந்தக் கலந்தாய்வு வகுப்பில், மாணவர்களிடம் தேர்வு முடிவு குறித்த பயத்தை அகற்றுவது, தேர்ச்சி பெற்றாலும், தேர்ச்சி பெறாவிட்டாலும் அதை மனப்பக்குவத்துடன் கையாள்வது, குறித்து மாணவர்களிடம் விளக்கமாக கூறி வருவதாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
English Summary: Special Classes to be conducted for the students who were failed in the board Exams in Chennai.