சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பல மாணவர்கள் தங்கள் புத்தகங்கள் உள்பட கல்வி சம்பந்தமான பல பொருட்களை இழந்த நிலையில் பல்வேறு அமைப்புகளின் மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு ராஜலட்ச்மி கல்வி நிறுவனம் சிறப்பு வகுப்புகளை இலவசமாக நடத்தவுள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களுக்கான சிறப்பு வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும் என்றும் இந்த இலவச வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தங்கம் மேகநாதன் அவர்கள் கூறியதாவது, “சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக எங்களது கல்வி நிறுவனங்களின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், கீழ்ப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில் முக்கியப் பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த வகுப்புகளை பேராசிரியர் முத்துசாமி ஒருங்கிணைப்பார். இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் hod.maths@rajalakshmi.edu.in என்ற இ மெயிலில் பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு டிசம்பர் 19 முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வார இறுதி நாள்களில் இந்த வகுப்புகள் நடைபெறும்.
மேலும் இந்த வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகள் ஆகியோருக்கு உதவியும், வங்கிக் கடன் பெற ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஒருங்கிணைப்பாளராக எஸ்.கௌதம் செயல்படுவார். இவரை 8939528028 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
English summary-Special classes for plus 2 students