சென்னை நந்தனம் பகுதியில் உள்ள மத்திய குடிசைத் தொழில் வாரியத்தின் விற்பனை மையத்தில் கைத்தறிப் புடவைகளுக்கான சிறப்புப் பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இந்த சிறப்புப் பிரிவை பிரபல பரதநாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, கூடுதல் பொது மேலாளர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “தேசிய கைத்தறி தினமான கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று கைத்தறி ஆடை ரகங்களின் விற்பனையையும், நெசவாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் “இந்தியா கைத்தறி” என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மத்திய குடிசைத் தொழில் வாரியத்தின் விற்பனைக்கூடங்களில், கைத்தறி ஆடை ரகங்கள் அதிகளவில் இடம்பெறும். “இந்தியா கைத்தறி” சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பிரிவில் மங்களகிரி, வேங்கடகிரி, பல்ராம்புரம், மகேஸ்வரி, கோட்டா டோரியா, போச்சம்பள்ளி, பனாரஸ் டான்சோய் பட்டு, பனாரஸ் கட்-ஒர்க் புடவைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான கைத்தறி ஆடைகள் ரூ.1,200 முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.
English summary : Special Initiative for handloom saris next to Delhi, Chennai