சமீபத்தில் அஞ்சல் துறை அறிவித்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகியவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இந்த இரு சேமிப்புத் திட்டங்களில் சேரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அஞ்சல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளதாவது:
குழந்தைகளுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு, பொன்மகன் பொது வைப்பு நிதி என்ற இரு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ் லகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சேரலாம்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் இத்திட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
சென்னை மண்டலத்துக்குட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்கள், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இப்பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு மெர்வின் அலெக் சாண்டர் தெரிவித்துள்ளார்.
English summary-Special Prizes for Selavamagal & Ponmagan Saving Schemes on 13th & 14th November!